Skip to Content

Languages

விவேகானந்தர் நினைவு பாறை

VRM

சுவாமி விவேகானந்தர் தான் உடல் விட்ட பிறகும் வருங்கால சந்ததியினரை தான் முடிக்காமல் விட்டு சென்ற தனது வேலையை தொடர்ந்து செய்ய ஊக்கப்படுத்துவேன் என கூறியுள்ளார். அது இன்றும் நடப்பதை நாம் கண்ணார காண்கிறோம். சுவாமிஜி அதை பல வழிகளில் செய்கிறார். கன்னியாகுமாரியில் இருக்கும் கம்பீரமான விவேகானந்தர் பாறை அப்படிபட்ட ஒரு உத்வேகத்தின் வற்றாத ஆதாரமாக உள்ளது.

விவேகானந்தர் நினைவு பாறை, அது இன்று உள்ளது போல், சுவாமிஜிக்கு ஒரு நினைவு சின்னம் மட்டுமின்றி திரு.ஏக்னாத்ஜி ரானடே செயல் பக்தியுடன் வெறும் நம்பிக்கை மட்டுமின்றி அறிவார்ந்த தீர்ப்பால் மேற்கொண்ட வேலையின் சின்னமாகவும் உள்ளது.

கன்னியாகுமாரியில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் பாறை - ஒற்றுமை மற்றும் தூய்மையின்  ஒரு தனித்த குறியீடு, தேசத்தின் ஒன்றுபட்ட முனைப்பின் மற்றொரு குறியீடாகவும் உள்ளது. நினைவு சின்னத்தினுள், நாட்டின் அனைத்து கட்டடக்கலை அழகும் ஒரு களிப்பான கலவையோடு உள்ளது. இது ஒற்றுமையின் ஒரு சின்னம் ஏனெனில் முழு தேசமும் விரும்பி, பணிபுரிந்து பங்களித்தனர். அனைத்து மாநிலங்களில் இருந்தும் நபர்கள் அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இது முக்கியமாக ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் ஸேவகர்கள் கருவாக்கி உழைத்த, காஞ்சி காமகோடி பீட பரமாச்சார்யாள் வடிவமைத்த, ராமகிருஷ்ணா மிஷன் ஆசிர்வதித்த மற்றும் சின்மயா மிஷன் சுவாமி முதல் நன்கொடை  கொடுத்த நினைவு சின்னமாகும். அனைத்து ஆன்மீகம், பண்பாடு மற்றும் தேசிய அமைப்புக்கள் இதை ஆதரித்தன. மேலும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு நிதி அளித்த ஒரு நினைவு சின்னமாகும். இப்படி, இந்த நினைவு சின்னம் கன்னியாகுமாரி  மூன்று கடல்களின் சந்திப்பு புள்ளி போல ஒரு கவன ஈர்ப்பு புள்ளியாக அமைந்தது. செப்டம்பர் 2, 1970, விவேகானந்தர் நினைவு பாறையை துவக்கி வைத்த இந்திய ஜனாதிபதி ஸ்ரீ.வி.வி.கிரி சக இந்தியர்களை நாட்டின் அழைப்பிற்கேற்ப எழ அறைகூவல் விடுத்தார். ஏகநாத்ஜி 1966 ல் தனது ஒரு உரையில் அழகாக கன்னியாகுமரியின் தனிச்சிறப்பை விவரித்தார். அவர் விவேகானந்தர் நினைவு பாறை பற்றி முதல் கேந்திர தொழிலாளர்கள் குழுவிற்கு எழுச்சியூட்டும் உரைகள் ஆற்றினார், அது வி.அர்.எம் (விவேகானந்தர் நினைவு பாறை ) மற்றும் வி.கே. (விவேகானந்தா கேந்திரா)'வின்  பின்னால் உள்ள யோசனையை தெளிவாக்க உதவியது.

அந்த உரைகளின் தொடர் பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கிறது.





Courtesy : View360 Virtual Tour India Ltd

Affordable Accommodation Available At Vivekanandapuram, Kanyakumari, click here to know more.